ஆறாது சினம் – விமர்சனம்

மலையாள “மெமெரீஸின்” தமிழ் வெர்ஷன் “ஆறாது சினம்” .

மனைவி, குழந்தையை விபத்தில் பறிகொடுத்த சோகத்தில் இருந்து மீளமுடியாமல் குடியோடு குடித்தனம் நடத்தும் போலீஸ் அதிகாரி அருள் நிதி.

அதே நேரத்தில் தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக கொடூரக் கொலைகள் நடக்கின்றன, கொலைக்கான காரனமும் பின்னனியும் தெரியாமல் போலீஸ் தினறுகிறது. போலீஸ் கமிசனர் ராதாரவி, அருள்நிதியிடம் இந்த கேசைக் கொடுத்து பழைய பன்னீர் செல்வமா வரனும் என்கிறார். அருள்நிதி அந்தக் கேசை எப்படி டீல் செய்கிறார் என்பதே படத்தின் கதை.

அந்தக் காலத்து க்ரைம் த்ரில்லர் படங்களைப் போன்று கொலைகளுக்கு காரனமாக படத்தில் அதுவரை சம்பந்தமில்லாத புது நபரை காண்பிக்கும் பழைய டைப் கதை என்றாலும். திரைக்கதை அமைத்த விதம் அற்புதம்.

முற்பாதியில் வரும் ரோபோ சங்கரின் காமெடிக் காட்சிகள் திரைக்கதையின் ஸ்பீடு பிரேக்கர். அருள்நிதி, ப்ரிதிவிராஜ் அள்விற்கு நடிக்கவில்லையென்றாலும் ஓரளவுக்கு சமாளித்திருக்கிறார். தமனின் பின்னனி இசை படத்தோடு நம்மை ஒன்றவைக்கிறது.

மெமரீஸை விட முற்பாதி சுவாரஸ்யம் குறைவு என்றாலும், பிற்பாதி படத்தை காப்பாற்றி விட்டது.

ஆறாதுசினம் – தேறிவிட்டது!

Comments

comments