ஆறாது சினம் (Memories) – தேறுமா?

”ஆறாது சினம்” ஈரம், மற்றும் வல்லினம் படத்தை இயக்கிய அறிவழகன் இயக்க, தேனாண்டாள் தயாரிப்பில் அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதரவி, ரோபோ சங்கர், சார்லி நடிப்பில் நாளை வெளிவருகிறது.

Memoriesப்ரிதிவிராஜ் நடித்த ஜீது ஜோசப்பின் ”மெமரீஸ்” படத்தின் தமிழ் ரீமேக்தான் ”ஆறாது சினம்”.  ப்ரிதிவிராஜ் ஒரு காவல் அதிகாரி,  தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கடந்தகால பாதிப்புகளால்(மனைவி குழந்தையின் மரணம்) மீண்டு வர இயலாமல் முழு நேர குடிக்காரர் ஆகி விடுகிறார்.

அவர் வசிக்கும் பகுதியில் தொடர்சியாக நடக்கும் கொலைகளை ஆராய அவர் காவல்துறைக்கு உதவுகிறார். அத்தொடர் கொலைகள் எதற்காக? யாரால்? செய்யப்படுகிறது என்பதனை துப்பறிகிறார். இதனை விறுவிறுப்பாக மலையாளப் படத்தில் ஜீது ஜோசப் இயக்கியிருப்பார். மெமரீஸ் மலையாளப் படம்  ”Our Town” கொரியன் படத்தின் தழுவல்.

இப்படத்தை தமிழில் எப்படி இயக்கியிருக்கிறார் அறிவழகன் என்பது நாளை தெரிந்துவிடும்!.

Share...Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someonePrint this page