திரையுலகை விட்டு விலகும் அனுஷ்கா

பாகுபலி 2 க்குப் பிறகு இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என அனுஷ்கா முடிவெடுத்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடித்துவருகிறார்.

அனுஷ்கா ஷெட்டி 1981-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் பிறந்தார்..

2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் – நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படமாகும். 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். கடந்த பத்து வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்..

துவக்கத்தில் ஒரு சராசரி கவர்ச்சி நாயகியாக அறியப்பட்ட இவர், அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத்திறனை நன்கு வெளிப்படுத்தினார்.. இந்த திரைப்படம் மிகப்பெறிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.

தனது தந்தையின் வற்புருத்தலின் பேரில், விடுமுறைக்கால யோகா பயிற்சி வகுப்புகளில் கலந்துக்கொண்டவர், யோக முறைகளினால் கவரப்பட்டு முழு ஈடுபாட்டுடன் பயிற்சியை எடுத்துக்கொண்டார்.. பின்னர் மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோக கலையை முழுமையாக பயின்று, தீட்சை பெற்று யோகாவை பயிற்றுவிக்கும் பயிற்றுநர் ஆனார்.

இப்போது முழுநேர யோகா மைய்யம் ஒன்றைத் துவங்கி அதனை நடத்த திட்டமிட்டிருக்கிறார். திரையுலகில் வெற்றிகரமாக இருக்கும்போதே அவர் திரையுலகை விட்டு விலகுவது ஆச்சர்யமளிக்கிறது. கைவசம் இருக்கும் இன்னும் இரண்டு திரைப்படங்களையும் முடித்துக் கொடுத்து விட்டு கூடிய விரைவில் தன் யோகா மையம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

Comments

comments