ஹாலிவுட் படங்களுக்கு இணையாக சாதனை படைத்த ”பாகுபலி 2”

ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகவுள்ள ”பாகுபலி 2” திரைப்படம் 8 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. உலக அளவில் இவ்வாறு ஹாலிவு திரப்படங்கள்தான் வெளியாகும். இப்போது ”பாகுபலி 2”  அவ்வாறு அதிக அளவில்  வெளியாகும் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. வெளிநாடுகளில்  கிட்டதட்ட 1000 அரங்குகளுக்கும் மேல் திரையிடப்படுகிறது. இந்நிலையில் ‘பாகுபலி’ படத்தை மையமாக வைத்து  தொலைக்காட்சி தொடர்களாக எடுக்கவும் திட்டம் இருப்பதாக அதன் தயாரிப்பாளர் ஷோபு யாரலகட்டா தெரிவித்துள்ளார்.

450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, சாட்டிலைட்ஸ் உரிமம், வெளியீட்டு உரிமம் ஆகியவற்றின் மூலம் 500 கோடிக்கு மேல் வசூலாகியிருக்கிறது. வெளியாகும் முதல் நாளிலேயே ”பாகுபலி 2” – 100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

comments