பான் மசாலா – சிக்கலில் ஜேம்ஸ் பாண்ட்

பான் மாசலா விளம்பரப் படத்தில் நடித்த ஹாலிவுட் பிரபலம் ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் ப்ரஸ்னனுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக விளக்கம் கேட்டு டெல்லி அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பியர்ஸ் தனக்கு பான் மசலா ஆபத்தானது எனத் தெரியாது எனவும், பான மசாலா நிறுவனம் தன்னை ஏமாற்றி விட்டது எனவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இது சம்பந்தமாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தான் ஒத்துழைக்க தயராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிகெரெட் மற்றும் மது விளம்பரங்கள் இந்தியாவில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விளம்பரப்படுத்த 2003 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பிரபலங்கள் இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு தாங்கள் நடிக்கும் விளம்பரங்களை தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை நிச்சயம் பாயும் என சுகாதார அமைச்சின் இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Comments

comments