இந்தியன் – 2 படத்திற்கு மூவர் வசனம் எழுதுகிறார்கள்!

இயக்குநர் வசந்தபாலனிடம் காவியத்தலைவன், அரவான் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார். சங்கரின் 2.O படத்தின் திரையாக்க வடிவத்தை தமிழில் எழுதினார், இவருக்கு இந்தியன் – 2 படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை சங்கர் வழங்கியிருக்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும், கபிலன் வைரமுத்து இருவரும் இந்தியன் – 2 படத்திற்கு வசனம் எழுதும் எழுதும் நிலையில், சரவணக்குமாரும் இணைகிறார்.

லஷ்மி சரவணகுமார் தனது “கானகன்” நாவலுக்காக யுவபுரஷ்கார் விருதை பெற்றவர், மேலும் பரவலாக பேசப்பட்ட “உப்பு நாய்கள்” மற்றும் ”கொமோரா” நாவல்களையும் இரண்டு சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

Comments

comments