Ee.Ma.Yau (R.I.P) மலையாளம் – விமர்சனம்

அங்காமலி டைரிஸ் லிஜோ ஜோஸ் இயக்கிய படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம் இது. கேரளாவில் இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியாகி பெரிய வெற்றியை தந்திருக்கிறது. இந்த வாரம் சென்னைக்கு வந்திருக்கிறது.

கேரளக் கடற்கரையோர சிறிய கிராமம் ஒன்றை களமாகக் கொண்டிருக்கும் இப்படத்தின் மையக்கதை வாவச்சன் ஆசான் (கைநகரி தங்கராஜ்) இவர் சொந்த ஊருக்கு திரும்பும்போது ஒருவரின் இறுதி ஊர்வலத்தை பார்க்கிறார். வீட்டிற்கு வரும் வழியில் கடற்கரையி;ல் தன் மகளை கேவலமாகப் பேசிய ஒருவரை கோவத்தில் அடித்து சாய்கிறார். வீட்டிற்கு வந்ததும் தான் கொண்டுவந்த வாத்தை சமைக்க சொல்லிவிட்டு தனிமையில் பேசிக் கொண்டிருகிறார். இரவில் வீடு திரும்பும் மகன் ஈஷி அவருக்கு தான் வாங்கி வந்த பிராந்தியை தந்தையுடன் சேர்ந்து குடிக்கிறார், உற்சாக மிகுதியில் தான் கொண்டு வந்த பையை எடுத்து வரச்சொல்கிறார். அதில் அவர் வாங்கி வந்த சாராயம் இருக்கிறது அதனையும் இருவரும் குடிக்கிறார்கள். அப்போது தனது மகனிடம் தான் இறந்து போனால் தன்னை மிகவும் ஆடம்பரமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்வியா? எனக் கேட்கிறார். அதற்கு ஈஷியும் உன்னை ஒரு மகராஜா போல எடுத்துச் சென்று அடக்கம் செய்வேன் என உறுதியளிக்கிறார். வாவச்சன் ஆசான் உற்சாக மிகுந்து பாட்டு பாடுகிறார். அதன்பின்னர் தவறி கீழே விழ்ந்து இறந்து போகிறார். அதன்பின் அவரின் இறுதிச்சடங்கு அவர் விருப்பப்படி நடை பெற்றதா? எனபதே படம்.

போதையில் இருக்கும் இரு ஆண்களுக்காக வீட்டில் வாத்துகறி சமைக்கும் மூன்று பெண்கள். அதில் ஒரு பெண்ணின் காதல், வாவச்சன் ஆசான் மனைவியின் அங்கலாய்ப்பு என முதல் பகுதியில் நகைச்சுவையாக செல்கிறது படம். இரண்டாம் பகுதி முழுக்க அடித்து துவைக்கும் மழையில் அடுத்தடுத்த காட்சிகள் உணர்ச்சி பிழம்பாக அதே வேளையில் மிகவும் எதார்த்தமுடன நகர்கிறது.

வாவச்சன் மரணத்தில் மர்மம் இருக்கிறது, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஒருவர் சந்தேகப்பட அதனை நர்ஸ் ஒருவரும் பாதிரியாரிடம் உறுதிப்படுத்த சர்ச் நடவடிக்கைகளில் ஈடுபடாத ஈஷி மீதிருக்கும் கோபத்தில் பாதிரியார் காவல்துறைக்கு தகவல் சொல்லி வரச்சொல்கிறார். இதற்கிடையில் கையில் பணம் இல்லாமல் மனைவியின் செயினை எடுத்துக் கொண்டு இறுதிச் சடங்கிற்கான ஏற்பாட்டினை தன் நண்பன் வினாயகம் உதவியுடன் ஈஷி அலைவதும். சவப்பெட்டி வியாபாரி ஈஷியிடம் ஒரு மொக்கை சவப்பெட்டியை பெரிய விலைக்கு தலையில் கட்டுவதும் சிறப்பான இடங்கள்.

அதன்பின் வரும் காட்சிகளை படம் பார்த்து தெரிந்து கொள்வதுதான் சுவாரஸ்யமாக இருக்கும். மிகச்சிறந்த ஒளிப்பதிவு. படத்தில் தேவையான இடங்களில் மட்டுமே ஒலிக்கும் இசை இறுதிக் காட்சிகளில் பிரமாண்டமாக மாறுவது. கொட்டும் நிஜ மழையில் எல்லா பாத்திரங்களும் மிகசிறப்பாக நடித்திருபது என படம் 120 நிமிடங்கள் பரபரப்பாக நகர்கிறது.

கேரள அரசின் சிறந்த இயக்குனர், சவுண்ட் டிசைன் மற்றும் குணச்சித்திர நடிகை விருதுகளை வென்றிருக்கிறது. நல்ல சினிமா பார்க்க விரும்பும் ரசிகர்களூக்கான படம் இது. தவற விடாதீர்கள்.

Comments

comments