கபாலி – முதல் தமிழ் -மலாய் திரைப்படம்

மலேசியா எப்போதும் இந்திய சினிமாவை அதிகம் கொண்டாடும் நாடு. அங்கிருக்கும் மலாய்க்காரர்கள் ஹிந்தி சினிமாவின் வெறிபிடித்த ரசிகர்கள். ஹிந்தி திரைப்படங்கள் அங்கு ஏற்கனவே மலாய் மொழியில் திரைக்கு வந்துவிட்ட நிலையில் முதன் முதலாக ரஜினியின் கபாலி மலாய் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது.

மலேசியா மட்டுமல்லாது சிங்கப்பூர், இந்தோனேஷியா நாட்டிலும் கூடுதல் வரவேற்பை நிச்சயம் பெறும். கபாலி வெற்றியடைந்தால் நம் பிரபல நடிகர்களின் படங்களும் இதேபோல வரிசை கட்டலாம்.