கணிதன் – விமர்சனம்

E = mc 2  ன்னு ஐன்ஸ்டீன் அளவு கணக்கு போடுவார்ன்னு எதிர்பார்த்தா ஒன்றாம் வாய்பாடையே தப்பு தப்பா ஒளறிக் கொட்டிருக்கான் கணிதன்.

பிபிசியில் ரிப்போர்டராக சேரவேண்டும் என்று கனவில் இருக்கும் அதர்வாவுக்கு அவர் நினைத்தபடியே வேலை கிடைக்கிறது. அது கிடைக்கும் தறுவாயில் அவரை சர்டிபிகேட் ஃப்ராட் கேசில் போலீஸ் கைது செய்கிறது. அதிலிருந்து மீண்டு வெளியே வந்து ஒரு சப்பை டீமை வைத்துக்கொண்டு ஒற்றை ஆளாகப் போராடி வில்லன் நெட்வொர்க்கை வீழ்த்தும் வழக்கமான  ஆக்சன் ஹீரோக் கதை.

திரைக்கதையில் எதர்த்தம் 0.0001% கூடக் கிடையாது. படத்தில் பாராட்டும்படியோ, ரசிக்கும்படியோ ஒரு காட்சி! கூட கிடையாது. திரைக்கதை ஏதோ சித்தன் போக்கு சிவன் போக்குன்னு போற போக்குல போய்ட்டிருக்கு.

படத்தில் பாட்டு வேற தேவையில்லாத இடத்தில வந்து எறியிற வயிற்றில் பெட்ரோல் ஊத்துது. அதர்வா பாடிய நல்லா டெவலப் பண்ண மாதிரி மேல் மாடியையும் டெவலப் பண்ணி நல்லக் கதையா கேக்கலாம்.

கேத்தரின் தெரசா வழக்கமான தமிழ் சினிமா ஊறுகாய்( 3 பாட்டு 4 சீன்).

படத்துல எக்கசக்க குறை இருப்பதால் இதுதான் குறைன்னு எதையுமே குறிப்பிட்டு சொல்ல முடியல!.

கணிதன் – கூட்டிக் கழிச்சுப் பார்த்ததுல கணக்கு சரியா வரல!.

Comments

comments