கணிதன் – குமாரசாமியா? குன்ஹாவா?

கணிதன் தாணு தயாரிப்பில் டி.என் சந்தோஷ் இயக்க அதர்வாவுடன் கேதரின் தெரசா, பாக்யராஜ், மனோபாலா , ஆடுகளும் நரேன், கருணாகரன் மற்றும் வில்லனாக தருண் அரோரா நடிப்பில், டிரம்ஸ் சிவமணி இசையில், அரவிந் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் நாளைமுதல் உலகெங்கும் வெளிவருகிறது.

போலி சான்றிதழால் இளைஞர்கள் எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் எனும் இதுவரை உலக சினிமா பார்க்காத மையக்கருவுடன்.. வழக்கமான காதல், பழிதீர்த்தல், நகைச்சுவை கிளிஷேக்களுடன் இருக்கும் படம் என்பதை ட்ரெய்லரை பார்த்தாலே புரிந்துவிடும்.

அண்ணன் அந்தணன் தனது விமர்சனத்தில் அதர்வா பிபிசி வேலைக்கு விண்ணப்பிக்க, சான்றிதழை சரிபார்க்கும் பிபிசி அதர்வாவின் சான்றிதழை பயண்படுத்தி வெளிநாட்டு வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் பெற்று இருப்பது தெரிய வருகிறது!.இதுபோல பலபேரின் சான்றிதழ்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன. அதனை அதர்வா எப்படி முறியடிக்கிறார் என்பதே படமாம்!.

இங்க படிக்கிறதுக்கே லோன் கிடைக்கல, இதுல சர்டிஃபிகேட்டுக்கு லோன்! அதுவும் கோடிக்கணக்கில்?? டைரக்டர் எந்த ஊர் வங்கில இப்படி கொடுக்கிறாங்கன்னு சொன்னா நமக்கும் உதவியா இருக்கும்.

கணிதன் கணக்கு பலிக்குமா? அல்லது தப்பு கணக்கு ஆகுமா?  என்பது நாளைக்கு தெரிந்து விடும்