“கட்டப்பா” சத்யராஜ் குறித்த ரகசியம் ஒன்றை நடிகை குஷ்பு கூறியுள்ளார்

கட்டப்பா கேரக்டரில் நடித்த சத்யராஜை பாராட்டியும், அவருக்கு இணையான நடிகர்கள் குறைவு என்றும்  ரகசியம் ஒன்றை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

khushsundarசத்யராஜை தவிர வேறு யாராவது கட்டப்பா கேரக்டரில் நடித்திருந்தால் பாகுபலிக்கு இவ்வளவு பெரிய ஹிட் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. சத்யராஜூக்கு ஜோடியாக அதிக படங்களில் நான் தான் நடித்துள்ளேன் என்றும் தனது ரசிகர் ஒருவருக்கு பதில் கூறியுள்ளார்.khushsundar

‘பெரியார்’ படத்தில் மிக அற்புதமாக நடித்திருந்தும் அவருக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றமே. ஆனாலும் இந்த முறை அவருக்கு கட்டப்பா கேரக்டர் விருதை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன்’ என்று மேலும் குஷ்பு கூறியுள்ளார்.  இந்திய நடிகர்களில் சிறப்பான நடிப்பை தருவதில் வல்லவர் சத்யராஜ் என்றும்,  கதா பாத்திரத்தை உள்வாங்கி கொண்டு அந்த கேரக்டராகவே மாறுவார் என்றும் கூறியுள்ளார்

khushsundar‘புரட்சிக்காரன்’, வீரநடை’, ‘உன்னை கண் தேடுதே’, ‘பிரம்மா’, ‘கல்யாண கலாட்டா’, ரிக்சா மாமா’, ‘பெரியார்’, ‘மலபார் போலீஸ்’, ‘நடிகன், ‘வெற்றிவேல் சக்திவேல்’, ‘சுயம்வரம் இவையனைத்தும் குஷ்பூ, சத்யராஜுடன் இணைந்து நடித்த படங்களாகும்.

Comments

comments