மோசடிப் புகாரில் சிக்கிய லைக்கா…

இலங்கையை பூர்வீகமாக கொண்ட சுபாஷ்கரனின் நிறுவனமான லைக்கா இங்கிலாந்து மற்றும் பிரன்ஸில் மொபைல் சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறது. தமிழகத்தில் விஜய் நடித்த “கத்தி” படத்தை தயாரித்த லைக்கா தொடர்ந்து ரஜினி நடிக்கும்  2.0 படம் உட்பட பல முன்னனி நடிகர்களின் படத்தை தயாரித்து வெளியிடும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

lycaதற்போது ப்ரான்ஸில் தனது சிம் கார்டுகளை கள்ளச்சந்தையில் விற்றவகையில் கிட்டதட்ட ரூ.129 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக ப்ரான்ஸ் காவல்துறை அதன் 19 ஊழியர்களை கைது செய்திருக்கிறது.  லைக்கா கன்சர்வேடிவ் கட்சியினருக்கு மிகப்பெரிய தொகையை நிதியாக கொடுத்திருக்கிறது.

மோசடி செய்த பணத்தை தபால் நிலையங்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு கடத்தியிருப்பதாக அவர்கள் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புள்ள செய்திகளுக்கு:

The French Connection: How Paris Police Closed In On Cameron’s Biggest Donor

 

Share...Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someonePrint this page