“மெர்சல்” விமர்சனம்

mersal review

1. நீங்க எதிர்பார்க்கிற முதல் விஷயம் விவேகம் உடனான ஒப்பீடு. விவேகம் எல்லாம் ஒப்பிடவே முடியாத தெய்வ லெவல் திரைப்படம். அதனால அந்த வேலை நமக்கெதுக்கு.

2. விஜய் நாளுக்கு நாள் அழகாகிட்டே போறார் ( குறிப்பா துப்பாக்கியில் இருந்துன்னு சொல்லலாம்). அவருக்காக பார்க்கலாம்ன்னு உங்களுக்கு தோணுச்சுன்னா பார்க்கலாம்.

3. இசை ஏ.ஆர் ரஹ்மான்னு பார்த்தப்போ ஆச்சரியமாவும் சந்தோசமாவும் இருந்தது. ஆனா இந்த ரெண்டுக்குமே வேலை இல்லாம செய்தது தான் அவரோட முதல் வேலை. ஒருபாட்டும் மனசுல தங்கல.

4. அட்லீ ஒரு இயக்குநரா நம்பிக்கை கொடுக்கிறார். அவரோட படைப்புகள்ல ஒரு அழகியல் இருக்கு. ராஜாராணில இருந்தது. தெறில. இப்போ மெர்சல்ல்ல. எனக்கது பிடிச்சிருக்கு

5. மணிரத்னம் மாதிரி ஓரளவுக்கு எல்லாரையுமே நல்லா வேலை வாங்கியிருக்காரு. ஆனா அவரோட வேலைய கோட்ட விட்டிருக்காரு.

6. ஒரு வழக்கமான திரைக்கதைய அந்த கதை இப்படி தான் இருக்கப் போகுதுன்னு தன்னோட கதாப்பாத்திரங்கள் மூலமே சொல்ல வச்சது நல்லா இருந்தது. குறிப்பா சத்யராஜ் மூலமா வரக்கூடிய திரைக்கதை தொடர்பான வசனங்கள். ஆனா சத்யராஜ் எதுக்குன்னு சத்யமா தெர்ல

7. விஜய் அண்ணா தன்னோட அரசியல் நகர்வுக்கான மிக முக்கிய படமா இத அமைச்சிருக்காரு. எல்லாருக்குமே நாட்டுக்கு நல்லது செய்யணும்ன்ற ஆசை அம்மா போனதுக்கு அப்புறம் தான் ரொம்ப தைரியமா வருது போல.

கதை;

vijays-mersal1. அட்லீ ஒரு மோசமான கதாசிரியர்ன்னு தெறி பார்த்தப்பவே தெரிஞ்சது. இந்தப்படம் அதை உறுதி செய்யுது.

2. வழக்கமான சுதந்திரப் போராட்ட காலத்து பழிவாங்கல் கதைய எவ்வித பட்டி டிங்கரிங்கும் பார்க்காம அப்படியே இயக்கி இருக்காரு. ஒரே ஒரு வித்தியாசம் அப்போ நமக்கு சுதந்திரம் கிடைக்கல. இப்போ கிடைச்சிருக்கு. ஆனா நாடும் கதையும் அப்படியே தான் இருக்கு ( இப்டி எழுதி எவ்ளோ நாள் ஆச்சு )

3. நல்லதோர் பிரியாணி செய்து அதில் நலங்கெட்ட சிக்கனைப் போட்டால் எப்டி இருக்கும். அப்டிதான் இருக்கு கதை. விஜய் மிகப்பெரிய மருத்துவர்ன்னு பார்த்த மாத்திர கண்டுபிடிக்கிற ஒரு பிரிட்டன் மருத்துவருக்கு மத்தியில காஜல் அகர்வால்ன்ற சென்னை மருத்துவரால கண்டுபிடிக்க முடியல, தொலைக்காட்சி தொகுப்பாளர் சமந்தாவால கண்டுபிடிக்க முடியல. இன்னும் எவ்ளோ நாள் சார் ஹீரோயின இப்படி டம்மியாவே காட்ட போறீங்க.

4. இதெல்லாத்த விடவும் மிகப்பெரிய ஓட்டை தம்பி விஜய் காஜல் அகர்வால்கிட்ட கதை சொல்லும் போது பிளாஷ்பேக் திருநெல்வேலி பக்கம் ஒரு சின்ன கிராமம்ன்னு சொல்றாரு. ஆனா அண்ணன் விஜய்ட்ட சொல்லும் போது அதே கிராமம் மதுரை மானூர் ஆகிருது. இது எப்டி அட்லீ சார்.

எது எப்டியோ படம் முடிச்சு வரும்போது ஒரு ரசிகர்ட்ட படம் எப்டி இருக்குன்னு கேட்டேன்/ ‘எப்டி இருக்குன்னு சொன்னா ஓட்டுவீங்க’ன்னு சொன்னாங்க. இந்த மாதிரி நல்ல ரசிகர்களுக்காகவாவது ஒரு நல்ல படத்த எடுங்க இயக்குநர் சார்.

ஓ இந்தப்படத்துல வடிவேலு உண்டு இல்ல, அந்த விஷயமே மறந்து போச்சு…

நன்றி: சீனு – USA

Comments

comments