மிருதன் – விமர்சனம்

”மிருதன்னா” zombie க்கு தமிழ்ல அர்த்தமாம். டைட்டிலுக்கு யோசிச்ச அளவு கூட படத்தின் கதைக்கு யோசிக்கல. ஹாலிவுட் டப்பிங் ஸோம்பி படங்களை பார்த்திட்டிருந்த நமக்கு மேக் இன் இந்தியா திட்டத்தில் வந்திருக்கும் தமிழ் ஸோம்பிதான் மிருதன்.

படத்தின் கதை:

தெரிஞ்சா  சொல்லமாட்டோமா? வழ்க்கமா ஸோம்பி படங்களில் என்ன கதையோ அதேதான் இதுவும், இடையில் தமிழுக்காக மானே, தேனே, பொன்மானே போட்டிருக்காங்க.

ஸோம்பி:

சட்டையை கிழிச்சிகிட்டு அது மேலே சிவப்பு சாயம் கொட்டி கண்ணுல லென்ஸ் வச்சு லொள்ளு சபா மனோகர் பாடிலாங்வேஜ்ல ஸ்லோமோசன்ல பண்ணா ஸோம்பி ரெடி.

திரைக்கதை:

அப்படின்னு ஒன்னு இருந்த மாதிரி தெரியலியே!!. படம் ஆரம்பம் முதல் முடிவு வரை சுட்டுகிட்டே இருந்தாரு ஜெயம் ரவி. படம் முடிஞ்சு வெளில வந்த என்னோட பாக்கெட்லயும் இரண்டு குண்டுகள் கிடந்துச்சு.

நடிகர்கள்:

ஜெயம் ரவி, லெட்சுமி மேனன் இவங்களுக்கு கொடுத்த வேலையை ஓரளவுக்கு செய்திருக்கிறார்கள். மற்ற எந்த நடிகர்களும் ஜூனியர் ஆர்டிஸ்ட் லெவலுக்கு கூட நடிக்கல.

லாஜிக்:

மிருதன் 100% லாஜிக் ஃப்ரீ மூவி. ஸோம்பி படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாதுன்னு அவங்க கேட்டா? வேற அந்தப் படத்துல என்னதான் பாக்குறதுன்னு நாம கேக்கலாம். ஒரு காட்சியில் கூட எதார்த்தம் கிடையாது. நாமதான்  பதார்த்தமா எடுத்துக்கனுன்னு டைரக்டர் முடிவு செய்திருப்பார் போல.

இயக்குநர்:

Freedom 251 Managing Director கூட இவரைவிட நல்லா டைரக்ட் செய்திருப்பார். டைரக்சன்ல இன்னும் ABCD லெவல்லயே இருக்காரு!. ஒரு படத்தை எப்படி ஆரம்பிக்கனும், முடிக்கனுன்னு கூட தெரியல. தமிழ்ல ஸோம்பி மூவி எடுத்த அவரோட தைரியத்த பாராட்டலாம். ஆனா, அதுக்காகவெல்லாம் படத்தை பார்க்க முடியாது. இந்தப் படத்தில ஆக்சன், கட் சொன்னதை தவிர வேற எந்த வேலையையும் அவர் பார்த்த மாதிரி தெரியல.

படம்?:

இதுக்கு மேலயும் படம் எப்பிடின்னு கேட்டிங்கன்னா? அந்த வைரஸ் உங்களயும் தாக்கிரும்!

Comments

comments