அரசியல், சமூக நையாண்டி மேடை நாடகம் ”நவயுக இரத்தக்கண்ணீர்” – விமர்சனம்

எம்.ஆர்.ராதா, சோ இருவரும் அரசியலையும், சமூகத்தையும் அதன் சீர்கேடுகளை நேரடியாக விமர்சித்து நாடகம் போட்டவர்கள். அவர்களே திரைப்படங்களிலும் அதனை தொடர்ந்தனர். அவர்களுக்குப்பின் கவுண்ட,மணி, சத்யராஜ், மணிவண்ணனுக்குப் பிறகு விவேக், வடிவேலு ஓரளவுக்கு நகைச்சுவையாக சொன்னாலும் மேடை நாடகத்தில் ராதா, சோ’வை தவிர்த்து யாரும் நேரடியாக சொல்ல பயந்தனர்.

ஸ்மைல் சேட்டையின் இன்னொரு பிரிவான “பிளாக் ஷீப்” குழு “நவயுக ரத்தக்கண்ணீர்” எனும் மேடை நாடகத்தை 19.05.2018 மாலை 7 மணிக்கு கோயம்ப்பேடுரோகினி திரையரங்கில் அரங்கேற்றினார்கள். அரங்கம் நிறைந்திருந்தது இது விக்னேஷ் குழுவினர் மீது ரசிகர்கள் வைத்திருந்த நம்பிக்கையை காட்டியது.அவர்களை நாடகம் முழுமையாக திருப்திப் படுத்தியது என்பதை காட்சிக்கு காட்சி அரங்கம் அதிர கைத்தட்டல் எழுந்ததே சாட்சி.

 

 

 

 

 

அஜய் மல்லையா கோடிக்கணக்கில் வங்கியை ஏமாற்றி தலைமறைவாக இருக்கிறார். தன்னுடைய உருவத்தை மாற்றித்தர விஞ்ஞானி ஒருவரின் உதவியை நாடுகிறார். அதில் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் என்ன மாதிரி உருவம் எடுக்கிறார். அதனால் எப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கிறார் என்பதே கதை. இதில் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகள் செய்த, செய்து கொண்டிருக்கும் அபத்தங்களை கிழித்து தொங்கவிட்டுருக்கிறார்கள். ஸ்மைல் சேட்டை யூ ட்யூப் சேனல் ஆரம்பித்தபோதே நேரடியாக அரசியல்வாதிகளை கிழித்தார்கள்., அதனால் மிரட்டலுக்கும் ஆளானார்கள். இப்போது நாடகத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் இவர்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது. நாடகத்தி;ல் அரசியல் மட்டுமல்லாமல் நீட், அனிதா, விவசாயிகள், காவல்துறை என கதைக்களனை திறமையாக கையாண்டுள்ளார் இயக்குனர் விக்கி.

நடித்த அணைவருமே முதன்முதலாக மேடை நாடகத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால் ஒரு இடத்தில் கூட வசனத்தில், காட்சியில் பிசிறில்லாமல்  இருந்தது அவர்களின் கடின உழைப்பைக்காட்டியது. நாற்பது நாட்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்தாக விக்னேஷ் சொன்னார். நாடகம் முடிந்ததும் அரங்கில் இருந்த அததனை பேரும் எழுந்து நின்று கைதட்டினர்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழக அரசும், மூன்றாண்டுககளாக மத்திய அரசும் மக்களை எப்படியெல்லாம் வாட்டி வதைத்தபோதும் ஊடகங்கள் எல்லாவற்றையும் பூசி மெழுகுவத்தை சிறப்பாக நையாண்டி செய்திருந்தார்கள்.

Photo: Santhosh

இந்நாடகம் வருலிற ஜூன் மூன்றாம் தேதி இதே கோயம்ப்பேடு ரோஹினி அரங்கில் மாலை 7 மணி மற்றும் 9 மணி என இரண்டு காட்சிகளாக மீண்டும் நடைபெறவிருக்கிறது. மக்கள் அணைவரும் அவசியம் சென்று பார்க்கவேண்டும்.

இந்நாடகத்தில் பங்காற்றிய அணைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்,,

எழுத்து, இயக்கம்: ‘Dude’ விக்கி.

நடிப்பு: ஆர்.ஜே.விக்னேஷ், சுட்டி அரவிந்த், தீப்தி, நந்தினி, கார்த்திக், அப்துல்லா அயாஸ் மற்றும் பலர்.

செட்ஸ்: பத்மா ஸ்டேஜ் கண்ணன்.

ஒலி, ஒளி: ரோகினி தியேட்டர்.

Comments

comments