வசூலே இல்லை: புலம்பும் திரையரங்குகள்

சமீபத்தில் வெளியான படங்களில் “அரண்மனை 2” நல்ல வசூலையும், ”இறுதிச்சுற்று”தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல பேரையும் தட்டிச்சென்றதாக பரவலாக சமூக வலைதளங்கள் உட்பட செய்தியை பரப்புகின்றன. ஆனால் சென்னை மற்றும் கோவையைத் தாண்டி இறுதிச் சுற்றுக்கு வரவேற்பு இல்லை என்பதே உண்மை.

மேலும் அரண்மனை 2 படத்துக்கு முதல் இரண்டு நாள் தவிர்த்து பெரும்பாலான திரையரங்குகள் காலியாகத்தான் படம் ஒடிக்கொண்டிருக்கிறது. அரண்மனை 2 படம் சராசரி ரசிகர்களையும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் 20 கோடி வரை வசூல் என செய்திகளை பரப்புகிறார்கள்.

Share...Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someonePrint this page