18 கோடியை மறுத்த பாகுபலி நாயகன்

பாகுபலி படத்தில் நாயகனாக நடித்த பிரபாசுக்கு இப்போது உலகெங்கிலும் வரவேற்பு கூடியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பிரபலமான பிராண்டுகள் தங்கள் விளம்பரங்களில் நடிக்க பிரபாஸை கேட்டிருக்கிறது. ஆனால் அதனை பிரபாஸ் மறுத்து விட்டாராம். இந்த விளம்பரங்களில் அவர் நடித்திருந்தால் அவருக்கு கிட்டத்தட்ட 18 கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்திருக்கும்.

தன் மீது மதிப்பு வைத்திருக்கும் மக்கள் தான் சொல்லும் பிராண்டுகளை வாங்குவார்கள். அதனை தான் அவர்களின் மேல் திணிக்க விரும்பவில்லை என்பதாலேயே அவர் இந்த விளம்பரங்களை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பிரபாஸின் மதிப்பு வெகுவாக உயர்ந்து நிக்கிறது.

Comments

comments