ரஜினி மே15ஆம் தேதி முதல் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார்

Rajinii Meet his Fans

சூப்பர ஸ்டார் தனது மகள் திருமணத்தின் போதே ரசிகர்களுக்கு தனையே விருந்து வைப்பதாக அறிவித்தார். ஆனால் அது இன்றுவரை நடக்கவில்லை. பிறகு மீண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள தேதி  அறிவித்த நிலையும் அதுவும் ரத்து செய்யப்பட்டது..

இந்நிலையி தற்போது நடிகர் ரஜினிகாந்த் வரும் மே 15ஆம் தேதி முதல் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பில் முதல்கட்ட சந்திப்பு நிகழ்ச்சி  5 நாட்கள் நடக்கும் . இது மே 15 ஆம் தேதி துவங்கி 19-ம் தேதி வரை நடக்கிறது. இதில்  திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம், கரூர்,திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில்  ஒவ்வொருவருடனும் தனித்தனியாக ரஜினி புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்.  இதில் பங்கேற்கும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தனித்தனியே புகைப்படங்களுடன் கூடிய  அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரஜினியுடன் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியும் தள்ளிப்போகலாம் அல்லது ஆச்ச்ர்யமளிக்கும் வகையில் நடக்கவும் செய்யலாம்.

Comments

comments