₹349 க்கு Unlimited படங்கள் – சத்யம் சினிமாசின் புதிய அறிவிப்பு.

சத்யம் சினிமாஸ் மாதம் ₹349 செலுத்தினால் எத்தனை முறை வேண்டுமானாலும் படம் பார்க்கலாம் எனும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர்களின் பிரத்யோக இணையதளத்தில் பதிவு செய்துகொண்டபின் ரசிகரின் வாட்சப்க்கு வரும் வாடிக்கையாளர் தகவலை சேஎமித்துக் கொள்ள வேண்டும்.

இப்போது வழக்கம்போல் சத்யம் சினிமாசின் ஆன்லைனில்  by Sathyam fuel card டிக்கெட் பதிவு செய்தபின் சத்யம் குழுமத்தின் எந்த திரையங்கிற்கு சென்றாலும் அவர்களின் வாட்சப் எண்ணிற்கு தனது வாட்சப்பிலிருந்து முன்பதிவுக்கான Screen Shot மற்றும் Live Location அனுப்ப வேண்டும். அடுத்த 48 மணிநேரத்திற்குள் ஆன்லைனில் செலுத்திய கட்டணம் வாடிக்கையாளருக்கு திரும்ப அளிக்கப்பட்டு விடும்.

ஒரு மாத சந்தா ₹349 என்றும் ஐந்து மாத சந்தா ₹1749 எனவும் நிர்ணயிக்கப்பட்டு ஐந்து மாத சந்தா செலுத்துபவர்களுக்கு ஒரு மாத சந்தா இலவசமாகவும் அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் ஒரு படத்தை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை முதன்முறையாக சத்யம் சினிமாஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

திரையரங்கு கட்டணங்கள் வெகுவாக உயர்ந்துவிட்ட நிலையில் சர்வதேச தரத்துடன் திரையரங்குகளை நடத்தும் சத்யம் சினிமாவிம் இந்த திட்டம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு வரப்பிசாதம்.

திட்டத்தில் இணைய: https://www.unlimitedmovies.in/

Comments

comments