மலையாள பாடகி ஷான் ஜான்சன் மரணம்

மலையாள இசை உலகில் பிரபலமான இசையமைப்பாளர் ஜான்சன். கிட்டதட்ட 300 படங்களுக்கு மேல் இசையமைத்த இவர் ஆகஸ்ட் 2011 ஆண்டில் மரணமடைந்தார். கடந்த வருடம் அவரது மகன் ரென் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்தார். நேற்று அவரது மகள் ஷான் சென்னையில் மரணமடைந்தார்.

ஷான்(29) தனது முதல் திருமணத்தில் இருந்து முறைப்படி விவாகரத்து பெற்று மறுமணத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இப்படியொரு துயரச் சம்பவம் நேர்ந்துள்ளது. ஷான் ”ப்ரைஸ் த லார்ட்” ”திரா” போன்ற மலையாளப் படங்களில் பாடியிருக்கிறார்.

Share...Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someonePrint this page