ரசிகர் ஒருவரிடம் ₹10 கூடுதல் விலை வாங்கியதற்காக சங்கம் திரையரங்கத்தின் கேண்டீனுக்கு ₹50,000 கொடுக்கச்சொல்லி கோர்ட் உத்தரவு!

சென்னை பூந்தமல்லி சாலையில் அமைந்திருக்கும் சங்கம் திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற ரசிகர் ஒருவர் படத்தின் இடைவேளையில் ஸ்நாக்ஸ் வாங்கியிருக்கிறார். அப்போது ₹140 வாங்கிய ஸ்நாக்சுக்கு ₹10 கூடுதலாக வசூலித்திருக்கிறார்கள். இது பற்றி முறையிட்டதற்கு இது வங்கிக்கான சேவைக் கட்டணம் என சொல்லியிருக்கின்றனர்.

ரசிகர் இதற்கான ரசீதுடன் தனது வங்கியை அணுகியபோது அப்படி சேவைக்கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என உறுதியளித்துள்ளது. உடனே இது பற்றி கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இப்போது கோர்ட் திரையரங்கின் கேண்டீனுக்கு ரசிகருக்கு ₹50,000 அபராதமாக செலுத்த சொல்லி உத்தரவு பிரப்பித்துள்ளது.

இதனை ஆறு வாரத்திற்குள் செலுத்தவில்லையெனில் 9% வட்டியுடன் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிரப்பித்துள்ளது. திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட விலையை விடவும் கூடதலாகத்தான் உணவுகளை விற்கிறார்கள். இப்படி மேலும் கூடுதலாக வசூலிக்கும் அடாவடி திரையரங்குகளுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும்.

Comments

comments