சன் குழுமத்துக்கு சோனி மியூசிக் காப்புரிமை தடை கோரியுள்ளது

Sony Music and Sun Network lock horns over copyrights.

சமீபத்திய இளையராஜா மற்றும் SPP பிரச்சனைக்கு முன்னரே கடந்த ஆண்டு ஜூலை மாதமே சன் குழுமம் தனது அனுமதியைப் பெறாமல் தான் உரிமை பெற்றுள்ள பாடல்களை பயண்படுத்துவதாக சொல்லி சன் குழுமத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது பற்றி இரு தரப்பும் பேசி முடிவுக்கு வராமல் போகவே சோனி வழக்கு தொடுத்து கடந்த வெள்ளி முதலாக சன் குழுமம் பாடல்களை பயண்படுத்த் தடை வாங்கியிருக்கிறது.

சன் குழுமம் தான் படங்கள் மற்றும் பாடல்களை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றிருப்பதால் தனக்கு அதனை பயண்படுத்தும் முழு உரிமையும் உண்டு என வாதிடுகிறது. ஆனால் சோனி மியூசிக் உரிமை பெற்ற காட்சிகளில் மட்டுமே பயண்படுத்தாமல் இசை கோர்ப்புகளை மற்ற காட்சிகளும், நிகழ்ச்சிகளுக்கும் பயண்படுத்துவதை அணுமதிக்க முடியாயாது என்பதே அதன் வாதம்.

பொதுவாக அனுமதி பெற்ற பாடல்களை அதன் காட்சிகளுடன் ஒளிபரப்பாமல் மற்ற நிகழ்ச்சிகளுக்கும் பயண்படுத்துவது காப்புரிமை மீறல் என்பதால் நீதிமன்றம் சன் குழுமத்துக்கு தடை விதித்திருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். இளையாராஜா வின் காப்புரிமைக்கு எதிராக சமூக வளைத்தளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வெளிவந்தன.

மேலும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் பொருப்பேற்றவுடன் தொலைக்காட்சிகளுக்கு இனி யாரும் இலவசமாக பாடலோ, காட்சிகளோ தரவேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார்.  இப்போது இவ்விகாரம் காப்புரிமை பிரச்சனையை ஒரு தெளிவான பாதைக்கு இட்டுச் செல்லும் என நம்பலாம்.

Comments

comments