நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

நடிகர் சூர்யா தர்கா ஒன்றில் வழிபடும் வீடியோ வெளியானது. இதனால் சூர்யா மதம் மாறிவிட்டதாக தகவல்கள் பரவியதும் சூர்யா தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தான் இசையமைப்பாளர் ஏஆர். ரகுமானின் தாயார் கேட்டுக்கொண்டதால், கடப்பாவில் உள்ள அமீர் பீர் தர்காவுக்கு சென்றதாகவும், அப்போது சில வழிபாடுகள் நடைபெற்றதாகவும் சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது”.  மேலும் கடந்த 2013-ஆம் ஆண்டு படப்பிடிப்பிற்காக ஆந்திர மாநிலம் கடப்பா சென்றபோது எடுக்கப்பட்டது எனவும் சூர்யா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது

இதனால் தான்  இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக செய்தி பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌சூர்யா இஸ்லாம் மதம் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், இஸ்லாமியராக மாறவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.