”த ரெவெனன்ட் ” விமர்சனம்: காப்ரியோ ஆஸ்கார் வெல்வார்!

கி.பி 1823-ல் லூசியானாவின்(Louisiana Purchase – Dakotas) ஒரு காட்டுப் பிரதசத்தில் ஊடுறுவுகிறது அப்போது செவ்விந்தியர்களால் அந்தப் படையணியினர் தாக்கப்படுகின்றனர். அதிலிருந்து தப்பிப் பிழைத்த காப்ரியோ மற்றும் அவரது மகன் மேலும் சில துருப்புகளும் காட்டை கடக்கும்போது காப்ரியோ உணவுக்காக வேட்டையாடும்போது கரடியால் அதிபயங்கரமாக தாக்கப்பட்டு உயிருக்குப் போராடுகிறார். அவருடன் அவர் மகனையும் மேலும் இருவரையும் விட்டு விட்டு மற்றவர்கள் வெளியேற காப்ரியோ சாகும்வரை காத்திருக்காமல் இப்போதே அவரை கொண்று விடலாம் என காப்ரியோவின் மகனுடன் தங்கிய மூத்த வீரர் முடிவெடுக்கிறார். அதனை காப்ரியோ மகன் எதிர்க்க காப்ரியோ கண் எதிரே அவர் மகனைக் கொன்றுவிடுகிறார். தண்ணீர் எடுக்கச் சென்ற மற்றொருவர் வந்தவுடன் காப்ரியோ மகனைக் காணவில்லை என அவரை கட்டயாப்படுத்தி அவசரமாக ஒரு குழியைத் தோண்டி காப்ரியோவை அதில் இழுத்துச் சென்று அரைகுறையாக மூடிவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

அக்குழியிலிருந்து தப்பித்து தன் மகனைக் கண் எதிரே கொன்று போட்டவனை காப்ரியோ எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் மையக்கதை.

மைக்கேல் புங்கே எழுதிய ” த ரெவெனன்ட் ” என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ” ரெவெனன்ட் ” என்றால் ” சாவில் இருந்து தப்பிப் பிழைத்தவர் ” என்று அர்த்தம்..

பனி சூழ்ந்த காட்டில் காப்ரியோ மெல்ல மெல்ல திடம்பெற்று வழியெங்கும் சந்திக்கும் பிரச்சனைகளை சமாளிப்பதை அற்புதமாக காட்சிப் படுத்தியுள்ளார்கள். உயிர் பிழைத்திருப்பதன் உன்னதத்ததை தன்னை காப்பற்றிய குதிரையைக் கிழித்து அதன் குடலுக்குள் ஒரு இரவைக் கழிக்கும் காட்சியில் காட்டியிருப்பார்கள்.

ப்ரெஞ்சுக் காரர்களை அயோக்கியர்கள் , கேவலமானவர்கள் , அவர்கள் செவ்விந்தியர்களை ஈவு இரக்கமில்லாமல் கொல்பவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். செவிந்தியர் ஒருவர் காப்ரியோவைக் காப்பாற்றுவார். காப்ரியோ ஒரு செவிந்தியப் பெண்ணைக் காப்பாற்றுவார். காப்ரியோவின் தலைவனும் மனித நேயத்துடன் நியாயமாக காட்டபடுவார். இது ப்ரெஞ்சுக் காரர்களும் சிலர் நியாயமாக இருக்கிறார்கள் என்பதற்கான காட்சிகள்.

ஆஸ்கார் பரிந்துரைப் பட்டியலில் இம்முறை காப்ரியோவுக்கு விருது நிச்சயம். இது உலக சினிமா ரசிகர்களுக்கான ரத்தமும் சதையுமான விருந்து.