U Turn(கன்னடம்) – விமர்சனம்

u-turn

கன்னட கிரவுட் பன்டிங் இயக்குனர் பவன்குமார் லூசியாவின் வெற்றிக்குப் பின் இயக்கி வெளிவந்திருக்கும் படம் யு-டர்ன். பெங்களூர் நகரத்தில் இருக்கும் மேம்பாலம் ஒன்றில் நடுவில் இருக்கும் டிவைடர் கற்கலை நகர்த்திவிட்டு யு-டர்ன் அடித்து செல்பவர்களை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் மிக நேர்த்தியான படம்.

ராஞ்சனா(Shraddha Srinath) பெங்களூரு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக சாலை விதிகளை மீறும் நபர்களை பற்றிய கட்டுரைக்காக டபுள் ரோட்டில் யு- டர்ன் அடிக்கும் நபர்களை அங்கிருக்கும் ஒரு பெரியவர் மற்றும் RTO வில் இருக்கும் நண்பரின் உதவியுடன் எடுத்து அதில் இருக்கும் ஒரு நபரின் முகவரிக்கு செல்கிறார். அங்கு வீடு பூட்டியிருக்கவே தன் அலுவலக சீனியர் க்ரைம் ரிப்போர்டருடன்  சினிமாவுக்கு செல்கிறார். நள்ளிரவில் வீடு திரும்பும்போது அங்கு வரும் போலீஸ் விசாரணைக்காக அவரை அழைத்துச் செல்வது முதல் திரைக்கதை வேகம் எடுக்கிறது. விசாரணையின்போது டபுள் ரோட்டில் இதே போல யு-டர்ன் அடித்த பத்து பேரும் மர்மமான முறையில் இறந்திருப்பதும். அனைத்தும் தற்கொலை கேசுகளாக மூடப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. விசாரணை அதிகாரி நாயக்(Roger Narayan) இந்த கேசை இத்துடன் முடித்துக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார். படத்தில் நேர்த்தியாக நடித்திருப்பவர் இவர் ஒருவரே..

u turnஇடைவேளைக்குப் பின் கதை அவ்வபோது தொய்வடைகிறது. நாயகி, நாயகன் காதல் படத்தின் ட்விஸ்டுக்காக பயண்படுகிறது. மேலும் கிளைமேக்ஸ் எதிர்பார்ப்பது போல் முடிவடைவதும் சற்று அயர்ச்சிதான்.

ஆனால் திரைப்பட ரசிகர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படம் இது. குறைந்த லொகேஷன்கள் அதிலும் திரும்பத் திரும்பக்காட்டப்படும்போது நமக்கு போரடிக்காமல் கதை சொல்லும் உத்தி வியக்கவைக்கிறது. வழக்கமான தமிழ் பேய்ப்படங்களை போலல்லாமல் ஹாலிவுட் பாணியில் கதை சொன்னாலும். கிளைமேக்ஸில் கன்னட ரசிகர்களுக்காக சற்று தடுமாறியிருக்கிறார். சில லாஜிக் மீறல்களை தவிர்த்து விட்டு படத்தை ரசிக்கலாம்..

Share...Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someonePrint this page