நடிகர் வினுசக்ரவர்த்தி காலமானார்

சமிபத்தில் வினுசக்ரவர்த்தி திடீரென்று ரத்த அழுத்தமும், சர்க்கரையும் அதிகமானதால் மயங்கி விழுந்துள்ளார். அவருடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது வினுசக்ரவர்த்தி முழுவதுமாக நினைவை இழந்து கவலைக்கிடமாக இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார்.

vinu chakravarthy passed away உசிலம்பட்டியில் ஆதிமூலத்தேவர் – மஞ்சுவாணி அம்மாளுக்கு மகனாக 1945 டிசம்பர் 15 ல் பிறந்த அவருக்கு வயது 71. ஆரம்பத்தில் தென்னக ரயில்வேயில் பணிபுரிந்த அவர் பின்னாட்களில் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானார்.

அருணாச்சலம், குரு சிஷ்யன், நாட்டாமை போன்ற சுமார் 1002 தமிழ் படங்களிலும், சில மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார். ரஜினிக்காந்துடன் இவர் நடித்த தம்பிக்கு எந்த ஊரு, மனிதன், குரு சிஷ்யன், சிவா, ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, அதிசயப்பிறவி, அண்ணாமலை, வீரா, அருணாச்சலம், சிவாஜி அணைவராலும் ரசிக்கப்பட்ட படங்களாகும்.

இவரது மனைவியின் பெயர் கர்ணப்பூ… அவருக்கு சரவணன் என்கிற மகனும், சண்முகப் பிரியா என்கிற மகளும் உள்ளனர்..

முகவரி : 63, அபுசாலி தெரு சாலிகிராமம், சென்னை.

Comments

comments