தமிழ் ராக்கர்ஸை அழிக்க 3 கோடி – விஷால்

திருட்டு வீடியோ ஒழிப்புக்கு என்று ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் சம்பந்தபட்ட பட தயாரிப்பாளர் சார்பில் சங்கத்துக்கு 1 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தப்படுகிறது.

tamilrockers.comதமிழ்ராக்கர்ஸ் இணையதளத்துக்கு முடிவுகட்ட தயாரிப்பாளர் சங்கதலைவர் விஷால், ஞானவேல்ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் தகவல் தொழில் நுட்ப குழு ஒன்றை உருவாக்கினார்கள். லட்சங்களில் சம்பளம் பெறும் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் 42 பேர் பணி அமர்த்தப்பட்டனர். கடந்த சில மாதங்களாக தமிழ் ராக்கர்ஸ் இணையதள அட்மினை கண்டறிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

தமிழ் ராக்கர்ஸ் அட்மினை கண்டறிய தகவல் தொழில் நுட்ப குழு வல்லுனர்களுக்கு மாதம் 35 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 3 கோடி ரூபாயை தயாரிப்பாளர் சங்கம் செலவிட்டுள்ளதாகவும், இதனால் தயாரிப்பாளர் சங்கத்தின் வங்கி இருப்பு நிதி பாதியாக குறைந்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தரப்பு மறுத்துள்ளது. தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு லட்சங்களில் சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்

Courtesy: Polimer News

Comments

comments