அஜித் படத்தை திட்டித் தீர்த்த தயாரிப்பாளர்

ரசிகர்களிடம் பிரம்மாண்ட எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் ஏமாற்றத்தை கொடுத்த படம் என்றால் அஜித்தின் விவேகம். சமீபத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்போதைய சினிமா நிலைமை குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, சினிமாவை கெடுப்பது இயக்குனர்கள் தான்.

அதற்கு உதாரணமாக, அஜித்தின் விவேகம் படத்தில் ஒரு கண்ராவியும் இல்லை. அந்தப் படத்திற்கு அவர்கள் செய்திருக்கும் செலவு அநியாயம் என்று பேசியுள்ளார்.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .